preloader

அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில், வேலூர், வேலூர் மாவட்டம்

ஆலய அமைப்பு

service service
service service

ஆலய அமைப்பு

கோயில் வளாகம்
கோட்டையின் உள்ளே வடபகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயம், இக்கோட்டையை அமைத்த பொம்மி ரெட்டி ன்னும் நாயக்க மன்னனால் அதே காலத்தில் (கி.பி.1566ல்) கோட்டையுடன் சேர்ந்தே அமைக்கப்பட்ட தென்பர்.இதன் கருவறை கிழக்கு நோக்கி அமைந்திருந்தாலும், கோபுர வாயில்கள் இரண்டும் கோயிலின் தென்பகுதியில் கட்டப்பட்டுள்ளன.இக்கோயில் வளாகம் கிழக்கு மேற்காக 95.50 மீட்டர் நீளணிம், தெற்கு வடக்காக 92 மீட்டர் அகலமும் கொண்ட நிலப்பரப்பில் அமைந்துள்ளது.தெற்கு கோபுர வாயில் வழியாக நாம் இக்கோயிலின் உள்ளே செல்ல வேண்டும். இக்கோபுரம் வெளிப்பிரகார மதிற்வருடன் சேர்ந்தவாறு கட்டப்பட்டுள்ளது.

முதல் கோபுர வாயில்
கோபுரத்தின் கூரை வரை இரு நிை‘களாகத் திட்டமிட்டு ணிழுவதும் கற்களால் கட்டப்பட்ட (இக்கோபுரத்தின்) அடிப்பகுதி 15 மீட்டர் அகலம், 23 மீட்டர் நீளம், 15 மீட்டர் உயரம் கொண்டு அமைந்துள்ளது. அதற்கு மேல் அமைக்கப்பட்டுள்ள ஏழு நிை‘க் கோபுரம் செங்கல் தையினால் ஆனது ஆகும்.

இரண்டாவது கோபுர வாயிலும் கோயில் வளாகணிம்
இப்பெரிய ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், திரே 23 மீட்டர் தூரத்தில் மற்றொரு சிறிய கோபுர வாயில் அமைந்துள்ளதைக் காண‘ாம். இவ்விரண்டாவது கோபுரமும், முதல் கோபுரத்தைப் போலவே உள்பிரகார மதிற்வருடன் இணைத்துக் கட்டப்பட்டுள்ளது. இவ்விரண்டு மதிற்வர்களும் அவற்றின் உட்புறத்தில் ஒட்டிய வாறு அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள் தாங்கிய திருச்ற்று மாளிகையைக் கொண்டு அமைக்கப்பட்டவை ஆகும்.
உள் பிரகாரத்தின் நடுவே பிரதான கோயிலும் (ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் சன்னதி) அதன் முன்பாக (புதிய) ஸ்ரீ நடராஜர் மண்டபணிம் அமைந்துள்ளன.
மேற்குப்பகுதித் திருச்ற்று மண்டபத்தில் முறையே ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ ப்பிரமணியர் ஆகிய கடவுளர்க்கான சன்னதிகள் தனித்தனியே அமைந்துள்ளன.
வடமேற்கு மூலையில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி ன்னும் அம்பிகைக்கு விமானத்துடன் கூடிய சிறிய கோயிலைக் காணலாம்.

ற்றிலுணிள்ள மண்டபணிம் வட்ட வடிவில் தூண்களும் இப்பகுதி 13 அல்லது 14ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் ன்பதை உறுதிப்படுத்துகின்றது. அதன் திரே நவஜோதி மண்டபணிம் (தற்போது நவசக்தி சத்யஜோதி தீபம் உள்ள இடம்) அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. இவ்வகிலாண்டேஸ்வரியின் சன்னதியை வலம் வரும் போது அதன் பின்புறமாக மதிற்வரை ஒட்டி அலைமகளுக்கும், கலைமகளுக்குமான இரண்டு சிறிய சன்னதிகள் அமைந்துள்ளதைக் காண்கிறோம்.
உள் பிரகாரத்தின் வடகிழக்கு மூை‘யில் சிறிய யாக சாலை மண்டபமும், அதன் கிழக்கு மூலையில் நடுவே கிணற்றுடன் கூடிய கோயில் மடப்பள்ளியும் அமைந்துள்ளது.

about