preloader

அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில், வேலூர், வேலூர் மாவட்டம்

தல வரலாறு

service service
service service

தல வரலாறு

முன்னுரை
மனிகன் நாகரிகம் தோன்றிய நாள் முதலே தன்னை இயற்கையின் சீற்றத்திலிருந்தும், திரிகளின் அச்றுத்தலிலிருந்தும் காப்பாற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டான். இதனை அகழ்வாராய்ச்சிகள் பல நமக்கு தெரிவிக்கின்றன. முதன் முதல் மக்கள் தங்கள் குடியிருப்புகளைச் ற்றி அமைத்துக்கொண்ட சிறிய அளவிலான அரண்கள், கா‘ப்போக்கில் ஊரைச் ற்றியும் ராணுவத் தளவாடங்களைச் சேகரித்து வைக்கவும், பெரிய அளவி‘ான கோட்டைகளாக உருப்பெற்றன.
சிந்து வெளிப்பகுதியில் ஹரப்பா மொஹஞ்சதாரோ ன்ற இடங்களில் அகழ்வாராய்ச்சியின் போது இத்ததைய கோட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன்பின் மனிதனின் நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப கோட்டைகளும் அதைச் சார்ந்த கட்டிடங்களும் ஆங்காங்கே அமைந்துள்ள இயற்கை அமைப்பைத் துணைக்கொண்டு கலை அம்சத்துடனும் உறுதியாகவும் அமைக்கப்பட்டதைக் காண்கிறோம்.
இன்று நம்மிடையே ஞ்சி இருக்கின்ற கோட்டைகள் தவிர, இலக்கியங்களும், இதிகாசங்களும் இவ்வாறிருந்த பல கோட்டைகளின் வர‘ாற்றை இயம்பி நிற்பதையும் கருத்தில் கொள்வோம்.

வேலூர் கோட்டை ந்த வகை?
பல வகையான கோட்டைகளில் வேலூர் கோட்டை, வேலங்காடுகள் நிறைந்த கானகப் பகுதியில் தரை மீது அமைக்கப்பட்டதால் வனதுர்கம் ன்ற வகையினைச் சேர்ந்ததாக கூறலாம். அதன் கிழக்குப்புறம் மட்டும் ஒரே வாயிலைக் கொண்டுள்ளதால் ஏகணிகதுர்க்க வகையைச் சேர்ந்தது னவும் கொள்ளலாம்.

தமிழகத்தின் தலைச்சிறந்த கோட்டை
தமிழக மலைக்கோட்டைகளில் மிகச் சிறந்தது செஞ்சிக்கோட்டை. தரையில் கட்டப்பெற்ற கோட்டைகளில் சிறந்தது வேலூர் கோட்டை ஆகும். வேலூர் கோட்டையைப் பற்றி நாம் சில தகவல்களை அறிவோம். தென்னிந்தியத் தரைக் கோட்டைகளில் தலைச்சிறந்த கோட்டையும், தரைமீதே கட்டப்பட்டதும், ற்றிலும் அகன்ற ஆழமான அகழியினால் சூழப்பட்டதும், த்தனையோ போர்களில் திரிப் படைகளின் தாக்குதல்களைச் சந்தித்தும் சாயாமல் தலைநிமிர்ந்து நிற்பதுமான இக்கோட்டை கர்நாடகப் போர்களிலும் தமிழக வரலாற்றிலும் முக்கிய பங்கேற்றுள்ளது. ஆகவே, இத்தகைய தனிச்சிறப்பைப் பெற்றுள்ள இக்கோட்டையைப் பற்றி நாம் அறிதல் மிகவும் அவசியமாகும்.

வேலூர் கோட்டையின் அமைப்பு
கோட்டையின் வடக்குப்புறம் பெங்களூர், சென்னை பெருவழிச் சாலையும், கிழக்கே ஆரணி சாலையும், மற்ற இருப்பக்கங்களிலும் கூடக் கோட்டையைச் ற்றிய சாலைகளும் இக்கோட்டையின் ல்லைகளாக அமைந்துள்ளது. வேலூர் நகரின் மையத்தில் அமைந்துள்ள இக்கோட்டையும் கோயிலும் சம்புவராயர், நாயக்க மன்னர்களின் கலைப்பாணிக்குத் தலைச்சிறந்த ஓர் டுத்துக்காட்டாக அமைந்துள்ளன. மார் மூன்று கி.மீ. நீளம் ற்று மதிற்வர்களைக் கொண்டு அமைந்துள்ள இக்கோட்டை, இத்தாலிய நாட்டுப் பொறியியல் நிபுணர்களைக் கொண்டு கட்டப்பட்டதாக வரலாற்று ஆசிரியர் சிலர் கணித்துக்கூறியுள்ளனர். பெரிய அளவி‘ான கற்களைக் கொண்டு கட்டுமான இடைவெளி சிறிதும் இன்றி, அவற்றை அழகாக இணைத்இதன் வர்கள் கலையழகும் சேர்த்து அமைக்கப்பட்டுள்ளன. முக்கியமாகக் கோட்டையின் வெளிச்வர்கள் கட்டடக்கலை மட்டுமின்றிச் சிற்ப வேலைப்பாடும் சேர்த்து அமைக்கப்பட்டவையாகும். இக்கோட்டை 136 ஏக்கர் நிலப்பரப்பில், ற்றிலும் கோட்டைச் வர்களும், அதையொட்டி அமைந்துள்ள அகழிக்கு அப்பால் பரந்த நி‘ப்பரப்பைக் கொண்டும் கட்டப்பட்டுள்ளது.

புராணம், செவிவழிச் செய்திகள்,தலபுராணங்கள் தோன்றிய விவரம்
18 ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் தமிழகத்தின் பல பகுதிகளை ஆண்டுவந்த சமயம், மக்களிடையே பக்திமார்க்கத்தைப் பரப்பவும் தலபுராணம் னும் நூல்களை உருவாக்கினர். இதன் காரணமாய் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு தலபுராணம் இயற்றப் பட்டதைக் காண்கிறோம். தலம் ன்றால் இடம் அல்லது ஊர்ப்புராணம் ன்றால் அவ்விடத்தை அல்லது ஊரைப் பெருமைப்படுத்திக் கூறும் கதை அல்லது வரலாறு. அத்தகையதொரு தலபுராணம் வேலூர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயிலைப் பற்றியும் வரையப்பட்டுள்ளது. இப்புராண வரலாறு செவிவழிச் செய்தியாகவும் உள்ளது. கஜ்ஜம் னும் கையெழுத்துப் பிரதிகளும் இப்புராண வரலாற்றைக் கூறுகின்றன. கி.பி. 1881-ல் ழுதப்பட்ட வடஆற்காடு மாவட்டக் குறிப்பும் புத்தகத்திலும் இத்தல புராணமும் செவிவழிச் செய்தியுமே குறிப்பிடப்பட்டுள்ளன. சமீபத்தில் மறைந்த அருள் மொழியர திருணிருக கிருபானந்த வாரியார் வாமி அவர்கள், சில ஆண்டுக்கு முன் ஒரு பழைய ஓலைச் வடியிலிருந்து இந்த தல புராணத்தைத் தமது திருக்கரங்களாலேயே பிரதி டுத்துள்ளார். இதுவும் அப்புராணக் கதையையொட்டியே அமைந்துள்ளதால் இதையும் கூட நமது நூலின் இப்பகுதிக்கு ஆதாரமாகக் கொண்டுள்ளோம். சப்தரிஷிகளான வசிஷ்ட்டர், அகத்தியர், கௌதமர், பரத்வாசர், வால்மீகி, காசியபர், அத்திரி ன்னும் ஏழு ணினிவர்கள் இவ்வூரிலும் இதைச் ற்றிய பகுதிகளிலும் சிவலிங்கங்களை அமைத்துச் சிவபெருமானை வழிபட்டு வந்தனர். இதில் வசிஷ்ட முனிவர் ஆற்காட்டுக்கு மேற்கில் உள்ள வேப்பூர் னும் வேப்பமரங்கள் நிறைந்த காட்டில் சிவலிங்கம் அமைத்து வழிபட்டார். அவ்வாறே அகத்திய முனிவர் வள்ளிமேடு னும் இடத்திலும், கௌதம முனிவர் ஆற்காட்டுக்குக் கிழக்கே உள்ள புதுப்பாடியிலும், வால்மீகி முனிவர் வி௸ாரம் னும் இடத்திலும், காசியபர் ஆற்காடிலும் சிவலிங்க வழிபாட்டைச் செய்தனர். மற்றொரு முனிவரான அத்திரி ன்பவர் வேலமரங்கள் நிறைந்த வேலூரிலேயே லிங்க வழிபாடு நடத்தினார்.

முனிவர் பூஜித்த சிவலிங்கம்
மேற்கூறிய இவ்வேழு முனிவர்களும் இவ்விடத்தை விட்டுச்சென்ற பிறகு, வேலூரில் அத்திரி முனிவரால் வழிபாடு செய்யப்பட்ட சிவலிங்கம் ஒரு சமயம் கரைபுரண்டு ஓடிய பாலாற்று வெள்ளத்தினால் மண்மேடிட்டு மூடப்பட்டது. அதனைச் ற்றி ஒரு குளம் போன்ற நீர்த்தேக்கம் அமைந்திருந்தது. நாளடைவில் லிங்கம் மண்ணில் மறைந்த இடத்தில் புற்றுகள் தோன்றின. அவ்விடமே தற்போதுள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரர் கோயிலாக மாறியது. மேற்கூறிய புராண வரலாற்றை அடுத்து, செவிவழிச் செய்தி வரலாற்றைச் சற்றே கவனிப்போம் பொம்மி ரெட்டி, திம்மிரெட்டி பொம்மிரெட்டி, திம்மிரெட்டி இருவரும் ஆந்திரதேசத்தில் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள பத்ராசலம் னும் ஊரைச் சேர்ந்த சகோதரர்கள் ஆவர் இவர்கள் இருவரும் யாதவ நாயுடு ன்பவரின் குமாரர்கள் ஆவர். குடும்பத்தில் ஏற்படவிருந்த அபாயத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள ஒருவரும் அறியாமல் ஊரைவிட்டு வெளியேறினர் அவ்வாறு புறப்பட்டவர்கள் இராமேவரம் நோக்கிச் செல்லும் வழியில் வேலூரை வந்தடைந்தனர். இவ்வூருக்கு 8 கி.மீ தொலைவில் உள்ள கைலாசப்பட்டிணம் ன்னும் ஊரில் சிற்றரசரான கரிகாலச்சோழன் ன்பவரின் அனுமதி பெற்று வேலூரில் குடியேறினர். இங்கு அவர்கள் மாட்டுப் பண்ணை வைத்துப் பொருள் ஈட்டிவந்தனர். அவ்வாறிருக்கையில் ஆரணியைச் சேர்ந்த சிற்றரசன் கரிகாலச்சோழன் நாட்டின் மீது போர்தொடுத்தான். சகோதரர்கள் இருவரும் போரில் கலந்துகொண்டு ஆரணி சிற்றரசனை தோற்கடிக்கத் தங்களுக்கு இடமளித்து ஆதரித்த சோழ அரசனுக்கு உதவினர். அதனால் மகிழ்ச்சியுற்ற கரிகாலன் இவர்களுக்குப் பரிம், பதவியும் பொருளும் வழங்கினார்.

பவும், பாம்புப்புற்றும்
இவ்வாறு இருக்கும் சமயம், பொம்மி ரெட்டியிடம் இருந்து மாட்டுப் பண்ணையில், ஐந்துக் கறவைக் காம்புகளைக் கொண்ட வெள்ளைப் ப ஒன்று இருந்தது. அந்தப்ப தினணிம் மேய்ச்சலுக்குப் பின்பு வற்றிய மடியுடன் வீடு திரும்பியது. மாடு மேய்ப்பவன் மீது சந்தேகம் கொண்ட பொம்மி ரெட்டி, ஒரு நாள் மாறு வேடத்தில் அக்கறவையின் பின் சென்று கவனித்தான். அப்ப மாலை வெய்யில் அருகில் இருந்த புதரின் பின்னே மறைந்து சென்றது. இதனை மறைந்திருந்து கண்காணித்த பொம்மி ரெட்டி அங்கு நடப்பவைகளைக் கண்டு அதிர்ச்சியுற்றார். அங்கே பாம்புப்புற்று ஒன்றின் அருகே அப்ப நின்றது. புற்றிலிருந்து வெளிக்கிளம்பிய ஐந்து தலைநாகம் ஒன்று அப்பவின் யில் இருந்த ஐந்து காம்புகளிலும் வாயை வைத்துப் பாலை உறிஞ்சிக்குடித்துக்கொண்டிருந்தது. இக்காட்சியைக் கண்ணுற்ற பொம்மி ரெட்டி அதிசயித்தவாறு தனது அரண்மனைக்குத் திரும்பினார். அன்றிரவு பொம்மி ரெட்டியின் கனவில் இறைவன் தோன்றி பாம்புப்புற்று இருக்கும் இடத்தில் தனக்குக் கோயிலும் அதைச் ற்றிக் கோட்டையும் அமைக்குமாறு கூறினார். மறுநாள் பொம்மிரெட்டி மந்திரி, பிரதானிகளுடன் பாம்புப்புற்று இருந்த இடத்தை அடைந்து வணங்கினார். ஐந்து தலை நாகம் தோன்றி அரசனுக்குப் புதையல் ஒன்று இருந்த இடத்தையும் ஒரு லிங்கத்தையும் காண்பித்தது. பொம்மி ரெட்டியும், திம்மி ரெட்டியும் புதையலை டுத்து அச்செல்வத்தைக் கொண்டு ஒன்பது ஆண்டுகளில் இக்கோயிலையும், கோட்டையையும் கட்டி முடித்தனர் ன செவிவழிச் செய்தி மூலம் அறிகிறோம்.

வேலூர் கோட்டை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆ‘யம்
மனிதனின் முக்கிய தேவையை முன்னிட்டே கோயில்கள் பல உருப்பெறலாயின. இவ்விதம் உருவான கோயில்கள் நாளடைவில் பக்தியை மட்டுமின்றிச் சணிதாய வளர்ச்சிக்குத் தேவையான அனைத்துப் பொதுக்கோட்பாடுகளையும் போதிக்கும் மையங்களாகவும் உருவாயின. பாட்டு, பரதம், போன்ற கலைகளும் இக்கோயில்களில் பக்தியுடன் சேர்ந்தே புகட்டப்பட்டன. ஆண்டவனுக்காக அமைக்கப்பட்ட ஆலயங்கள், பக்தியுடன் கலைகளையும் சேர்த்து அளிக்கும் கலை‘க் கோயில்களாயின். சிற்பங்களையும் ஓவியங்களையும், சேர்த்து அளிக்கும் கலைக கோயில்களாயின. சிற்பங்கள், ஓவியங்கள் போன்ற கலைகள் இறைவனின் திருவிளையாடல் போன்ற புராணங்களுடன் இணைந்து அளிக்கும் போது அவை சீர்பெற்று சிறப்படைகின்றன. பார்ப்பவ நெஞ்சம் பரவசமெய்துவதுடன் பக்தியிலும் மூழ்கித் திளைக்கின்றனர். தமிழகத்தில் இவ்வாறான கோயில்கள் பல, தை‘ச்சிறந்து விளங்குவதை பார்க்கின்றோம். வேலூரிலுள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரர் ஆலயமும் அத்தகைய கலைக் கோயில்களில் ஒன்றாகும்