நித்ய அன்னதான திட்டம்
வேலூர் கோட்டை, ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் 8-7-2015 புதன்கிழமை ணிதல் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் பெருமானின் திருவருளுடன் நித்ய அன்னதானத் திட்டம் துவக்கப்பட்டது. இறைவனுக்கு செய்யும் பூஜை முதலானவை மனிதர்களை சென்றடைவதில்லை. ஆனால், அடியார்களுக்கு செய்யும் அன்னதானம் முதலான அறங்கள் இறைவனை சென்றடைந்து மகிழ்விக்கும் ன்று திருமந்திரம் கூறும்.
மேலும் நமது இதிஹாச புராண சமய நூல்களும் அன்னதானத்தின் சிறப்பினை விரிவாக பேகின்றன. இல்லறத்தில் உள்ள ஒரு மனிதன், ஒவ்வொரு நாளும் விருந்தினரை உபசரித்து அன்னமிட்ட பின்புதான் உண்ண வேண்டும் ன்று மனுஷ்ய யக்ஞிம் ன்னும் நூலில், ஒரு கடமையாகவே நமது அறநூல்கள் கூறுகின்றன. ஆனால், இந்த காலகட்டத்தில் விருந்து உபசாரம் செய்யும் சூழ்நிலையோ, அவகாசமோ நமக்கு இல்லை ன்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆகவே அன்பர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு. பிறந்த தினம், மணநாள், நினைவு நாள் போன்ற முக்கிய நாட்களில், அடியார்களுக்கு திருவணிது செய்வித்து, திருவருளோடு தானத்தில் சிறந்த அன்னதானப் பலனையும் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரப் பெருமானின் திருவருளையும் பெற்று சகல சௌபாக்ய யோகப் பெருவாழ்வோடு கமாக வாழ வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
நித்ய அன்னதானத் திட்டத்திற்கு ஒருநாள் உபயமாக ரூ.5000 செலுத்தினால் பக்தர்களுக்கு மதியம் 12.00 மணியளவில் திருவமுது செய்விக்கப்படும் ன்று தெரிவித்துக்கொள்கிறோம்.